ஒடிசா, பீகார் உள்பட 5 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

ஒடிசா, பீகார், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு நவம்பர் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில்…

ஒடிசா, பீகார், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு நவம்பர் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதேபோல் குஜராத் மாநிலத்திற்கான சட்டச்சபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 5-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ந்தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற டிசம்பர் 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 10-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.