குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் கடத்தப்பட்ட 2வயது பெண் குழந்தை -போலீசார் விசாரணை!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில், இரண்டு வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெல்வேலியை சேர்ந்த பழங்குடியின பெண் அம்சவள்ளி, தசரா திருவிழாவையொட்டி, குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு குழந்தையுடன் சென்றுள்ளார்.…

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில், இரண்டு வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவெல்வேலியை சேர்ந்த பழங்குடியின பெண் அம்சவள்ளி, தசரா திருவிழாவையொட்டி, குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு குழந்தையுடன் சென்றுள்ளார். கோயில் அருகே தங்கியிருந்து பாசிமாலை விற்று வந்த அம்சவள்ளியின் 2 வயது குழந்தையை மர்மநபர்கள் நள்ளிரவில் கடத்தி சென்றனர்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்ய வந்த கன்னியாகுமரியை சேர்ந்த பெண்ணின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை மர்மநபர் கடத்தி சென்ற நிலையில் மற்றோரு குழந்தை கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.