உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக முதல் தொகுதி அணு ஆயுதங்கள் பெலாரஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டிற்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.
ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை நிறுத்தி விட்டு இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால், இந்த போர் 16 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக முதல் தொகுதி அணு ஆயுதங்கள் பெலாரஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், கோடை காலம் முடிவதற்குள் முழு ஆயுதங்களையும் அனுப்பி வைப்போம் என்று அவர் கூறியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.







