கட்டுரைகள் தொழில்நுட்பம்

மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவும் தொழில்நுட்பம்!


மணிகண்டன்

கட்டுரையாளர்

மொழிபெயர்ப்பு என்பது எப்போதும் சவாலான ஒன்று தான். ஏனென்றால் வெறுமனே ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு வார்த்தைகளையும் வாக்கியங்களையும் எளிதில் மொழிபெயர்த்து விட முடியாது. ஆனால் முடியும் என்கிறது தொழில்நுட்ப வளர்ச்சி!

தாய் மொழியும், மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியும் மொழிபெயர்ப்பாளருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், மொழிபெயர்ப்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழியைப் பேசும் மக்களின் கலாசாரமும், வாழ்வியல் முறையும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பத்தின் வருகையால் மொழிபெயர்ப்பு மிக எளிதாகிப் போனது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எத்தனையோ துறைகள் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் முன்னேறி வருகின்றன. மொழிபெயர்ப்புத் துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. முன்னணி இணையத் தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரான்ஸ்லேட் வசதியைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். மொழிபெயர்ப்பாளர்கள் கூகுள் டிரான்ஸ்லேட்டை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

எந்த மொழி வார்த்தையை உள்ளிட்டாலும் அதற்கான தமிழ் அர்த்தம் மறுபக்கம் காட்டுகிறது. தமிழ் மட்டுமல்ல, பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளைக் கூட கூகுள் மொழிபெயர்ப்பு உதவியுடன் மொழிபெயர்க்கலாம். ஆனால், மிக அதிக எண்ணிக்கையிலான வார்த்தைகளை மொழிபெயர்ப்பது கடினமாகவே கருதப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மொழிபெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சரி, குறைந்த எண்ணிக்கையிலான வார்த்தைகளை கூகுள் உதவியுடன் மொழிபெயர்த்துவிட முடியும். புத்தக அச்சகங்கள், வலைத்தளம் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்றால் என்ன செய்வது? அது மிகப் பெரிய வேலை ஆயிற்றே!

தொழில்நுட்பத்தின் வசதியால் அதுவும் சாத்தியமே! அதற்கு உதவும் தொழில்நுட்ப வசதி பற்றி தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். 

இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதற்காக இந்தியாவிலேயே இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த பிரபந்தக் (Prabandhak). தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் உழைப்பில் உருவாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான வார்த்தைகளை இதன் உதவியோடு நம்மால் மொழிபெயர்க்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு திறனுடன் செயல்படுகிறது இந்தப் பிரபந்தக்.

மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்புச் சேவை வழங்குபவர்கள், மொழிபெயர்ப்புச் சேவை தேவைப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைக்கும் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்புத் தளம் பிரபந்தக் தான் என்று அதை உருவாக்கிய நிறுவனம் கூறுகிறது.

புராஜெக்ட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஃப்ரீலான்சர் மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்புச் சேவை அளிப்பவர்கள் ஆகியோர் சங்கமிக்கும் தளமாக பிரபந்தக் திகழ்கிறது.

பிரபந்தக் உதவியுடன் தமிழ், இந்தி, பெங்காலி, பஞ்சாபி, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்க முடியும். இது கிளவுட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மற்ற மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்துக்கும் பிரபந்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை இதுகுறித்து படித்தபோது அறிந்து கொள்ள முடிந்தது.

பிரபந்தக்கின் சிறப்பம்சங்கள்:

  • 11 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.
  • செயற்கை நுண்ணறிவுடன் செயல்படுகிறது.
  • எந்த மொழியில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அதற்காக பிரத்யேகமாக தட்டச்சு செய்யும் வசதி உள்ளது. Thamizh என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழ் என்று வந்துவிடும். இந்தச் சிறப்பு வசதி இருப்பதன் காரணமாக நீங்கள் உங்கள் மொழியில் தட்டச்சு செய்யத் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை.
  • எழுத்துப்பிழையை சரிபார்க்கும் (spell checker) வசிதியும், அகராதியும் (dictionary) உள்ளது.
  • Neural Machine Translation என்ற சிறப்பம்சமும் உள்ளது. அதாவது, தானாகவே மொழிபெயர்க்க வேண்டிய வாக்கியங்களுக்கு இதுதான் அர்த்தம் என்று மொழிபெயர்க்க வேண்டிய மொழிக்கு மொழிபெயர்த்து காண்பித்து விடும். அதில் சிறு மாற்றங்களை மொழிபெயர்ப்பாளர்கள் செய்தால் போதும். இதனால் நேரம் பெருமளவில் மிச்சமாகும்.
  • 10 முதல் 15 வார்த்தைகளை தனியாகப் பிரித்து பல பிரிவுகளாக கொடுத்துவிடும். இதன்காரணமாக நாம் ஒவ்வொரு வாக்கியங்களையும் புரிந்துகொண்டு எளிமையாக மொழிபெயர்க்க முடியும்.
  • ஒரு நாளில் மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு வார்த்தைகளை மொழிபெயர்க்கிறார் என்பதையும் இந்த தளத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்திப் பார்க்க முடியும்.
  • மொழிபெயர்க்கப்பட்டவைகளை PDF, DOCX போன்ற பல வகை கோப்புகளாகவும் பதிவிறக்க முடியும். அதேபோன்று, எந்த வகையான கோப்புகளையும் பதிவேற்றி மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்க முடியும்.

பிரபந்தக்கை (https://app.prabandhak.in/) ரெவெரி லாங்குவேஜ் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்களுக்கும், மொழிபெயர்ப்புத் துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கும் ‘பிரபந்தக்’ ஓர் அரிய வரப் பிரசாதம் என்றால் அது மிகையல்ல!

ஆனால், இது இலவசம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

மின்னணு வர்த்தகம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுவரும் இந்தக் காலகட்டத்தில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடனான தகவல்தொடர்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால், தங்கள் வலைத்தளங்களை உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்த்து வருகிறது. ஆங்கிலமே பிரதான மொழியாக இணையத்தில் ஆட்சி செய்துவந்த காலம் இப்போது மலையேறி வருகிறது என்று தான் கூற வேண்டும். பல பன்னாட்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை அவர்களின் தாய்மொழி மூலம் அணுகவே முயற்சிகளை செய்து வருகிறது.

இதற்கு உதவும் வகையில் பன்மொழி வலைத்தளத்தை அனைத்து இந்திய மொழிகளிலும் எளிதாகத் தொடங்குவதற்கு Anuvadak தொழில்நுட்பத்தையும் ரெவரி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த அனுவாதக்கை பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்தை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும், நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் முடியும். இவையெல்லாம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சாத்தியமாகியுள்ளது.

எது எப்படியோ, மொழிபெயர்ப்புத் துறையில் சத்தமே இல்லாமல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றம்; கடந்து வந்த பாதை

EZHILARASAN D

குடியரசு தலைவர் தேர்தல்: எளிய மக்களை முன்னிறுத்தும் பாஜக

Web Editor

தமிழ்நாட்டிலிருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரா?

G SaravanaKumar