ஏசி வெடித்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயம்

செங்கல்பட்டு அருகே ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அடுத்த பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், தனது வீட்டிலேயே உணவகம் ஒன்றை நடத்தி…

செங்கல்பட்டு அருகே ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அடுத்த பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், தனது வீட்டிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த ஒரு மாத காலமாக வட மாநிலத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் தூங்க அறைக்கு சென்ற ராம்குமார், ஏசியில் இருந்து கரும்புகை வருவதை பார்த்து அருகில் சென்றுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை; ‘பெயர் பலகையை’ திறந்து வைத்ததார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்’

அப்போது திடீரென ஏசி வெடித்ததில் ராம்குமாரின் கை, கால், முகம் உள்ளிட்ட பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அலறி கிழே விழுந்துள்ளார். ராம்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார், ஏசி வெடித்ததற்கான காரணம் குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.