இந்தியாவில் ‘தி ஒடிசி’ படத்திற்கு ‘ஏ’ சான்று…!

தி ஒடிசி திரைப்படத்திற்கு இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ஒடிசி’. கிரேக்க புராணமான ஒடிசியை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மார்டன், ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யூனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து படக்குழு புரோமஷன் பணிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தி ஒடிசி படக்குழு இந்தியா வந்துள்ளது.

இந்த நிலையில் தி ஒடிசி திரைப்படத்திற்கு இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் எதுவும் நீக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.