என்னை யாரும் கடத்தவில்லை; மதுரை வேட்பாளர் இந்திராணி !

மதுரை மாவட்ட அதிமுக பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்திவிட்டதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் வேட்பாளர் என்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியிருக்கிறார்.  …

மதுரை மாவட்ட அதிமுக பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்திவிட்டதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் வேட்பாளர் என்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியிருக்கிறார்.

 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளராக இந்திராணியும், திமுகவின் சார்பில் கிருஷ்ணவேணியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதிமுக வேட்பாளர் இந்திராணியை அப்பகுதி திமுகவினர் கடத்தி வைத்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாகவும், வேட்பாளரை கடத்தி விட்டார்கள் என்று கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் வேட்பாளர் இந்திராணி என்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் உடல் நிலை சரியில்லாததால் வேட்புமனுவை திரும்பப்பெற்றதாகவும் கூறியுள்ளார். கடத்தப்படாத வேட்பாளரைக் கடத்தியதாகக் குற்றம் சொல்லி அப்பகுதி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.