முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டணி குறித்து தேமுதிகவுடன் யாரும் பேசவில்லை: சுதீஷ்

கூட்டணி தொடர்பாக எந்த கட்சியும் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என பிரேமலதா தெரிவித்து வருகிறார். இருந்தாலும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் முடிவெடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் மூன்றாவது அணி அமைக்கக் கூட தயார் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், எந்த கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை தங்களது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றார்.

பாமகவிடம் இட ஒதுக்கீடு சம்மந்தமாக மட்டுமே அதிமுக பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலில் கூட்டணி குறித்து பேசிய பின்னர்தான் தொகுதி பங்கீடும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்படும் என்றும் சுதீஷ் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பழுதானது படகு: நடு ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த 150 பேர்!

Gayathri Venkatesan

கொதிக்கும் எண்ணையை பசு மேல் ஊற்றிய கொடூரம் !

Vandhana

பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

Gayathri Venkatesan

Leave a Reply