தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சென்னையில் நேற்று (அக். 7) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,710-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து,விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தங்கம் நீடிக்கிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. தொடர்ந்து ஏழாவது நாளாக ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளிரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




