முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் இலை தலைகளை வெட்ட மாட்டோம் பசுந்தீவனங்களை மட்டுமே யானைகளுக்கு வழங்குவோம் என முதுமலை தெப்பக்காட்டில் யானை பாகன்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 28…

வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் இலை தலைகளை வெட்ட மாட்டோம் பசுந்தீவனங்களை மட்டுமே யானைகளுக்கு வழங்குவோம் என முதுமலை தெப்பக்காட்டில் யானை பாகன்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள்
உள்ளன ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும் ஊன் உண்ணிகள்
அச்சுறுத்தல் இருந்தால் அவைகளை பிடிக்கவும் வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் யானைகள் முகாமில் உள்ள அனைத்து யானைகளும் அவைகளுக்கு தேவையான உணவுகளை சேகரிக்க பாகன்கள் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று மரத்தில் உள்ள இலை தலைகளை வெட்டி எடுத்து வருகின்றனர்.

இதனால் வனப்பகுதியை பாதுகாக்க தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
யானைகளுக்கு பசுந்தீவனம் கொடுக்கும் திட்டம் இன்று முதல்
நடைமுறைப்படுத்தப்பட்டது இதனை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் துவக்கி வைத்து கூறுகையில் இதுவரை யானைகளுக்கான உணவுகள் வனப்பகுதிக்குள் சென்று மரத்தில் உள்ள இலை தலைகளை வெட்டி கொண்டு வந்து யானைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தன.

தற்போது அரசால் பசுந்தீவனம் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
தொடர்ந்து யானைகள் முகாமில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளுக்கும் பசுந்தீவனம்
கொடுக்கப்படும் வனப்பகுதிக்குள் சென்று இலை தலைகளை வெட்டி சேகரித்து கொண்டு
வருவது இனி தேவைப்படாது.

இதன் மூலம் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள் பாதுகாக்கப்படும் அதேபோல் மரங்களில்
இலை தலைகள் வளர ஏதுவாக இருக்கும் எனவே வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம்
கொடுக்கப்படும் திட்டம் இன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் யானை பாகன்கள்
அனைவரும் இனி வரும் நாட்களில் பசுந்தீவனம் மட்டுமே யானைகளுக்கு வழங்குவோம்
வனப்பகுதிகளில் மரத்தில் உள்ள இலை தலைகளை வெட்ட மாட்டோம் என்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.