சென்னை, கோவை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை ஜி.எம் நகர் அபுதாஹீர் , குனியமுத்தூர் பகுதியில் சோகைல், கரும்பு கடைப்பிலுள்ள மன்சூர் ஆகியோரின் வீடுகளிலும் மற்றும் உக்கடம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
ஜி.எம்.நகர் திமுக பிரமுகர் தமிமூன் அன்சாரி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி 82 ஆவது கவுன்சிலர் முபசீரா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெண் கவுன்சிலரான முபசீரா கோவை மாநகராட்சி வரி விதிப்பு குழுவின் சேர்மனாக உள்ளார். பெரிய கடை வீதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாநகர 21 இடங்களிலும் புறநகரில் கிணத்துக்கடவு ஒரு இடம் என மொத்தம் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் சென்னையில் 3 இடங்களில் சோதனை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலாங்கரையில் பிஸ்மில்லா தெருவில் உள்ள புகாரி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் சோதனை நடைபெற்று வருகிறது.







