கடலூர் மாவட்டத்தில் 13 அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாகவினர் கைது செய்யயப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பேருந்துகள் உடைப்பு, டயர் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், விருதாசலம் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் கிராமங்களுக்கு செல்லும் உள்ளூர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்
நல்லூரிலிருந்து விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதில் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார், மாற்று பேருந்து மூலம் பயணிகளை அனுப்பி வைத்ததுடன் மர்ம நபர்கள் வலை வீசி தேடி வருகின்றனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 13 அரசு பேருந்துகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.







