நெகிழிக்கு பதிலாக தக்காளி – நியூஸ்7 தமிழ் மற்றும் ஜோதி அறக்கட்டளை இணைந்து நடத்திய விழிப்புணர்வு !

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விலையில்லா தக்காளி வழங்கினர். அண்மையில் தக்காளியின் விலையானது, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் எளிய…

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விலையில்லா தக்காளி வழங்கினர்.

அண்மையில் தக்காளியின் விலையானது, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் எளிய மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க அரசு நியாயவிலை கடைகளில், குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில அரசியல் பிரமுகர்கள் தக்காளியை இலவச தங்களது தொகுதி மக்களுக்கு வழங்கினர். இதனை பொருட்டு,

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை இணைந்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சேகர் காலனியில் தஞ்சை மாநகராட்சியின் துணை மேயர் அஞ்சும் பூபதி தலைமையில் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வீட்டில் உள்ள நெகிழிகளை வாங்கிக் கொண்டு விலையில்லா ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டது. 

இதன் மூலம் பொதுமக்களிடம் நெகிழியின் பயன்பாட்டை தவிர்க்கவும், மாசற்ற நகரத்தை
உருவாக்க முயற்சி செய்வோம் என அறிவுறுத்தப்பட்டு நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.