நியூஸ் 7 தமிழின் நிகழ்ச்சி பிரிவு தலைவர் ஷண்முகம் காலமானார்; முதலமைச்சர் இரங்கல்

நியூஸ் 7 தமிழின் நிகழ்ச்சி பிரிவுத் தலைவராக பணியாற்றிய ஷண்முகம் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக ஷண்முகம் பணியாற்றி வந்தவர் ஷண்முகம். நியூஸ்…

நியூஸ் 7 தமிழின் நிகழ்ச்சி பிரிவுத் தலைவராக பணியாற்றிய ஷண்முகம் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக ஷண்முகம் பணியாற்றி வந்தவர் ஷண்முகம். நியூஸ் 7 தமிழின் பேசும் தலைமை, பீனிக்ஸ் மனிதர்கள் போன்ற வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை கொண்டுவந்தார். தனித்த குரல் வளத்தால் தனக்கென ஊடக உலகில் தனி இடம் பிடித்தவர் ஷண்முகம்.

இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், தனித்த குரல் வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் ஷண்முகம் மறைந்த செய்தியறிந்து துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான ஊடக பயணத்தில் கணீர் குரல், ஒழுங்கான வாசிப்பு, துல்லியமான உச்சரிப்பு என்று செய்தி வாசிப்பில் இலக்கணமாய் திகழ்ந்தார். அவரது மறைவு ஊடக உலகிற்கு பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியாலாளர் ஷண்முகத்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.