நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாகச் செய்தி வெளியிட்டதை அடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை  மாவட்ட நிர்வாகம் அவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளது.   நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது. …

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாகச் செய்தி வெளியிட்டதை அடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை  மாவட்ட நிர்வாகம் அவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளது.  

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது.  தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,  நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் சிந்துபூந்துறையில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தினால் பொதுமக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் உணவின்றி அவர்கள் தவித்து வந்த நிலையில்,  இது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாகச் செய்தி வெளியிட்டதை அடுத்து தற்பொழுது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் படகு வரவழைக்கப்பட்டு அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.