நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய இரண்டு வகுப்பறை
கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர்குப்பம் ஊராட்சி ஜாங்காளபுரம் பகுதியில்
தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில்
இருக்கும் 2 வகுப்பறை கட்டிடத்தில் பள்ளி மாணவர்களை அமர வைத்து பாடம்
நடத்தப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நமது நியூஸ்7 தமிழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.30 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் வகுப்பறை பற்றாக்குறையால் இதே பள்ளியில் மாணவர்களைத் தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகின்றன.
தலைமை ஆசிரியர் அறை என்பதால் மாணவர்களை உள்ளே அனுமதிக்காமல் தலைமை ஆசிரியர் அறைக்கு எதிரில் அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது. மாணவர்களின் பாதிப்பை உணராமல் மழைக்கால நேரத்தில் மாணவர்களைத் தரையில் அமர்ந்து பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.







