சூரியனின் ‘எக்ஸ்’ கதிர்களை புகைப்படம் எடுத்த ஆதித்யா ‘எல்-1 ‘-இஸ்ரோ வெளியிட்ட புதிய அப்டேட்!

சூரிய வெப்பத்தில் இருந்து வெளியாகும் ‘எக்ஸ்’ கதிர்களை படமெடுத்து ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பியுள்ளது. சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில்…

சூரிய வெப்பத்தில் இருந்து வெளியாகும் ‘எக்ஸ்’ கதிர்களை படமெடுத்து ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பியுள்ளது.

சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் தீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

https://twitter.com/isro/status/1721871906851397798?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1721871906851397798%7Ctwgr%5Ecdae4cf3e417d75e7628e057791f34eeb0a5c200%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fibctamil.com%2Farticle%2Fhel1os-captures-first-high-energy-x-ray-1699391808

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.