முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் ஆம்னி பேருந்துகளின் புதிய கட்டணம் வெளியீடு

புதிய பயண கட்டண பட்டியல் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதிய கட்டண பட்டியலை வெளியாகியுள்ளது.

பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணிநிமிர்த்தமாகத் தலைநகர் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊருக்குச் செல்ல பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தையே நம்பி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாகப் பயணத்தைப் கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் பலர் அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் பயணம் செய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகிறது. வரவிருக்கும் ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியும் ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறைந்ததாகத் தெரியவில்லை என மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து புதிய பயண கட்டண பட்டியல் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது புதிய கட்டண பட்டியலை வெளியாகியுள்ளது.

எந்த எந்த ஊருக்கு என்னென்ன விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்:

சென்னை – கோவை: குறைத்த பட்சம் ரூ1815 முதல் அதிகபட்சம் 3025

சென்னை – மதுரை: குறைந்த பட்சம் ரூ1776 முதல் அதிகபட்சம் 2688

சென்னை – சேலம்: குறைந்த பட்சம் ரூ1435 முதல் அதிகபட்சம் 2109

சென்னை – பழனி குறைந்த பட்சம் ரூ1650 முதல் அதிகபட்சம் 2750

சென்னை – தென்காசி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465

சென்னை – திருநெல்வேலி குறைந்த பட்சம் ரூ 2063 முதல் அதிகபட்சம் 3437

சென்னை – திருப்பூர் குறைந்த பட்சம் ரூ 1667 முதல் அதிகபட்சம் 2777

சென்னை – நாகப்பட்டினம் குறைந்த பட்சம் ரூ 1271 முதல் அதிகபட்சம் 1767

சென்னை – திருச்சி குறைந்த பட்சம் ரூ 1394 முதல் அதிகபட்சம் 1938

சென்னை – உடன்குடி குறைந்த பட்சம் ரூ 2211 முதல் அதிகபட்சம் 3630

சென்னை – திருச்செந்தூர் குறைந்த பட்சம் ரூ 2112 முதல் அதிகபட்சம் 3520

சென்னை – ஆறுமுகநேரி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465

சென்னை – ஆத்தூர் குறைந்த பட்சம் ரூ 2063 முதல் அதிகபட்சம் 3437

சென்னை – தூத்துக்குடி குறைந்த பட்சம் ரூ 2013 முதல் அதிகபட்சம் 3355

சென்னை – தென்காசி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465  ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்

G SaravanaKumar

ஆவினில் குடிநீர், பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்

Web Editor

அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் பேச்சு

EZHILARASAN D