மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய நுழைவாயில்

ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய நுழைவாயில் மற்றும் தகவல் நிலையம் கட்டுமான பணிகளை இம்மாத இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி 1971 மே-…

ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய நுழைவாயில் மற்றும் தகவல் நிலையம் கட்டுமான பணிகளை இம்மாத இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி 1971 மே- 1 தேதி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மதுரை மாநகராட்சி ஐம்பது வருடங்களை கடந்து பொன்விழா காணுகிறது.

மதுரை மாநகராட்சி மைய அலுவலகம் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில் மதுரை தல்லாகுளம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தின் முன் நுழைவாயில் மற்றும் தகவல் நிலையம் கட்டுமான பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை இம்மாத இறுதிக்குள் ஆகஸ்ட் 31க்குள் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு ஏற்கனவே இரண்டு நுழைவு வாயில்கள் இருந்த நிலையில், தற்போது கட்டப்பட்டு வரும் முன் நுழைவு வாயில் மாநகராட்சியின் பொன்விழா நினைவாக கட்டப்பட்டு வருகிறது.

இந்த நுழைவு வாயில் மற்றும் தகவல் நிலையம் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நுழைவாயில் பிரதான நுழைவாயிலாக இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.