முக்கியச் செய்திகள் தமிழகம்

கலை, அறிவியலிலும் புதிய பாடத் திட்டம்-அமைச்சர் பொன்முடி

கலை, அறிவியலிலும் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நீட் வரக் கூடாது என்பதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. மிக விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

பாடத்திட்டம் மாற்றம்: பொறியியல் கல்லூரியில் மாற்றம் கொண்டு வந்து உள்ளோம். முதல்வர் அறிவித்து உள்ள நான் முதல்வன் திட்டம் மூலம் கலை அறிவியல் படிப்பிலும் புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்படும்.

குறிப்பாக தொழில் முனைவர்களாக மாற்றும் வகையில் உலகை பற்றியும், பன்னாட்டு அறிவியல் பற்றியும் கல்வி கொண்டுவரப்படும் என்றார் அமைச்சர் பொன்முடி.

தமிழக அரசு குறித்து ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு தமிழக அரசு சரியாக செயல்படுகிறது என அவர் கூறியது சரி என்று பதிலளித்தார் பொன்முடி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இறந்து போன தலைவர் பற்றி அவதூறாக பேசுவது அநாகரீகமான அரசியல்: இல.கணேசன்

Niruban Chakkaaravarthi

ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’

Arivazhagan Chinnasamy

தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு பெயர் மாற்றம்

Web Editor