நிதித்துறைக்கு புதிய அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.   • கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை அரசு தகவல் தொகுப்பு விபரம் மையம் ஓய்வூதிய இயக்ககம் மற்றும் சிறு…

சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

• கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை அரசு தகவல் தொகுப்பு விபரம் மையம் ஓய்வூதிய இயக்ககம் மற்றும் சிறு சேமிப்பு இயக்குநரகம் ஆகியவற்றின் செயல் திறனை மேம்படுத்த அரசு அத்துறைகளை மறுசீரமைக்கும்

 

• மேலும் இம்மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குகள் விதித் தொகுப்பு திருத்தி எழுதப்படும்

 

• அரசு பொது நிதி நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

 

• மாநில பொது நிறுவனங்களின் கழகத்தை வலுப்படுத்தப்படும்

 

• பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க நிதித்துறை வல்லுநர்கள் கணக்கில் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களின் ஆலோசனைகள் தரப்படும்

 

• கடன் வாங்குவதால் ஏற்படும் செலவை குறைப்பதற்காகவும் மாற்று கடன் சார்ந்த இடர்களை குறைப்பதற்காகவும் பொது கடனை ஆய்வு செய்ய மறுசீரமைப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்

 

• அடிப்படையில் அரசு முடிவுகளை மேற்கொள்வதற்காக பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி குறியீடுகளின் போக்குகளை கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்வதற்கு, ஒரு நிதி பகுப்பாய்வு மையம் நிறுவப்படும்

 

• நிதித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது அவசியமாகும்

 

• நிதித்துறை அலுவலர்களுக்கு தேவையான பயிற்சி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புதிய பயிற்சி கொள்கை உருவாக்கப்படும்

 

• பழைய ஓய்வூதியத்திட்டத்தில் ஆண்டுக்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது

 

• சென்னைப் புறநகர் ரயில் அமைப்பின் குறிப்பாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வரை, தென்னக ரயில்வேயுடன் இணைந்து குளிர்பதன ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் அதற்கான சாத்தியகூறுகள் ஆய்வு செய்யப்படும்

 

உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.