#nepal பேருந்து விபத்து | உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள ஐனபஹாரா என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற போது பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பெரும்பாலும் இந்திய…

நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள ஐனபஹாரா என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற போது பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பெரும்பாலும் இந்திய சுற்றுலாப் பயணிகளே இருந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து மஹாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன் நேற்று (23.08.2024) மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இறப்புகளை உறுதிப்படுத்தினார்.தொடர்ந்து பேசிய அவர் மாநில அரசு நேபாள நிர்வாகத்துடனும், டெல்லி தூதரகத்துடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.

“நேபாளத்தில் ஆற்றில் மூழ்கியதில் 41 பேர் இறந்துள்ளனர். 12 பேர் நேபாள ராணுவத்தால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெரும்பாலான பயணிகள் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மகாஜன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.