நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா – அம்பாள் திருவீதி உலா!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனி பெருந் திருவிழாவின் 6ம் நாளான இன்று சுவாமி அம்பாள் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. தென்…

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனி பெருந் திருவிழாவின் 6ம் நாளான இன்று சுவாமி அம்பாள் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியாம்பாள் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆனி பெருந் தேர் திருவிழா. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

விழாவில், ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இன்று காலை சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அம்பாள் திருஞானசம்பந்தர்க்கு ஞானப்பால் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் வருகின்ற 11ஆம் தேதி நடைபெறுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.