தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 5,736 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இத்தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறும்.







