நன்னிலம் அருகே ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த இருவா் கைது!

நன்னிலத்தில் ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனா். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மெயின் சாலையை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் சூர்யா…

நன்னிலத்தில் ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனா்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மெயின் சாலையை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் சூர்யா இவர்கள் நன்னிலத்தில் உணவகம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது வீட்டில் தொன்மை வாய்ந்த ஐம்பொன் சிலை உட்பட சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் குற்றப் புலனாய்வு காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் இவர்களது வீட்டில் சோதனை செய்த பொழுது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தன்வந்திரி ஐம்பொன் சிலை, ராக்காயி அம்மன் வெங்கல சிலை,  1010 ஆம் ஆண்டு உடைய இரண்டு நாணயங்கள் மற்றும் ஒரு காலசக்கரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தந்தை மகன் இருவரையும் கைது செய்தனா்.

—–ரூபி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.