தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

டெல்லியில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் தேசிய  ஜனநாயக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல்…

டெல்லியில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் தேசிய  ஜனநாயக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த ஜூன் 23ம்தேதி  பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளின பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது, அதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம பெங்களூருவில்  வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முறியடிக்கும் வகையில் ஆளும பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 18ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார், சிவசேனாவில் இருந்து பிரிந்த சென்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.