நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி சார்பாக நடத்தப்படும் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளன்.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திருச்சி, நெல்லை, மதுரை , கோவை என நான்கு மண்டலங்களில் தினந்தோரும் 8 போட்டிகள் நடத்தப்பட்டது. தினமும் ஏறத்தாழ 16 அணிகள் போட்டியிட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போட்டியில் மண்டல வாரியாக தலா இரண்டு அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி மொத்தம் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு சென்றுள்ளது.
மண்டலம் மற்றும் குரூப் வாரியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் பின்வருமாறு..
கோவை
குரூப் A
ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
குரூப் B
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருச்சி
குரூப் A
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
குரூப் B
கே எஸ் ஆர் தொழில்நுட்பக் கல்லூரி
மதுரை
குரூப் A
சவுராஷ்டிரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
குரூப் B
கே எல் என் பொறியியல் கல்லூரி
நெல்லை
குரூப் A
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி
குரூப் B
மதர் தெரசா பொறியியல் கல்லூரி
காலிறுதி சுற்றில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் வெற்றி பெறும் ஒரு அணி அரையிறுதி சுற்றில் மண்டல வாரியாக களம் காணும்.