விஜய் சேதுபதியின்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் இசையை வெளியிட்ட கமல்ஹாசன்! – உற்சாகத்தில் ரசிகர்கள்

 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் இசையைக் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ விஜய் சேதுபதி…

 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் இசையைக் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இந்நிலையில் இப்பட்டத்தின் இசையைக் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/VijaySethuOffl/status/1654476636937670656?s=20

படக்குழு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதுடன் படத்தின் இசையையும் அவர் கைகளால் வெளியிட்டனர். இதனை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.