மதுரை மண்டலத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் 22 ரன் வித்தியாசத்தில்
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியை – திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி அணி வென்றது.
நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சார்பில் நடைபெற்று வரும் டி 20 போட்டியின் 6வது
நாள் போட்டி இன்று நடைபெற்றது. இன்று 11 மற்றும் 12 லீக் போட்டிகள் நடைபெற்றன, முதல் போட்டியில் மதுரை வக்போர்டு கல்லூரி அணியை சிவகங்கை கே.எல்.என் பொறியியல் கல்லூரி அணி 29 ரன் வித்தியாசத்தில் வென்று திரில் வெற்றியை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது போட்டியாக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரிக்கும், மதுரை
தியாகராஜர் கல்லூரிக்கும் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி பேட்டிங்-யை தேர்வு செய்து விளையாடியது.
முன்னதாக இந்த போட்டியை கே.எல்.என் கல்லூரி குழுமத்தின் நிறுவனர் கே.என்.கே.
கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி போட்டியை
துவக்கி வைத்தார். முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி அணியின் வீரர்களான ஜெகன் என்ற வீரர் 25 பந்துக்கு 27 ரன் எடுத்து அந்த அணியின் அதிக ரன்னாக எடுத்தார், அவரை தொடர்ந்து பாபு 21 பந்துக்கு 26 ரன்களையும், முத்து சுதன் 25 பந்துக்கு 18 ரன்-யையும் எடுத்து அணிக்கு வழு சேர்த்தனர, இதன் மூலம்
பி.எஸ்.என்.ஏ கல்லூரி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்
எடுத்தது.
இதன் மூலம் 143 ரன் இலக்குடன் களம் இறங்கிய மதுரை தியாகராஜர் பொறியியல்
கல்லூரி 20 ஓவர் முடிவில் இறுதி வரை போராடி 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்
மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி வீரர் ஆனந்த் 24
பந்திற்கு 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன்
விருதை பெற்றார்.
ஆட்டநாயகன் விருதை மதுரை மண்டல செய்தியாளர் ஹரிக்கிருஷ்ணன் – ஆனந்த்-க்கு
வழங்கி பாராட்டினார். தொடர்ந்து இந்த ஆட்டநாயகனுக்கான விருதை தனது தந்தைக்கு பரிசளிப்பதாகவும், கிராமப்புற மாணவர்களுக்கான நியூஸ் 7 தமிழ் நடத்தும் இந்த கிரிக்கெட் போட்டிக்கு பாராட்டை தெரிவிப்பதாக ஆட்டநாயகன் ஆனந்த் பேட்டிளித்தார்.