பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்று போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவரோடு சேர்த்து மேலும் 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அக்டோபர் 30ம் தேதி ஜாமீன் பெற்று ஆர்யன் கான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த வழக்கை விசாரித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு, ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி நேற்று விடுவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணைத் தலைவர் சஞ்சய் குமார், சொகுசு கப்பலுக்கு போதைப் பொருள் கொண்டு வந்த ஆர்யன் கானின் நண்பர் சஞ்சய் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆர்யன் கானுக்காக தான் போதைப் பொருள் கொண்டு செல்லவில்லை என தெரிவித்ததாகக் கூறினார். மேலும், போதைப் பொருள் கொண்டு வர உள்ளது குறித்து அறிந்ததும், அவ்வாறு கொண்டுவர வேண்டாம் என ஆர்யன் கான் கூறியதாகவும் சஞ்சய் குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
போதுமான ஆதாரங்களை சேகரித்து இருக்க வேண்டிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அதை செய்யாமல் ஆர்யன் கானை கைது செய்துவிட்டதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணைத் தலைவர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற 14 பேருக்கு எதிராக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.