“தேசிய இளைஞர் விருது” – எப்படி விண்ணப்பிப்பது ? யார் யார் விண்ணப்பிக்கலாம்? – முழு தகவல் இதோ!

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பாக…

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பாக தனிநபர்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சி மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பணியாற்றிய மற்றும் பங்களிப்புக்காக தேசிய இளைஞர் விருதுகளை வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்ய 15 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேசிய வளர்ச்சி மற்றும் சமூக சேவையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதும், சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதும் இந்த விருதுகளின் நோக்கமாகும். சமூக சேவை உள்பட தேசிய வளர்ச்சிக்காக இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன

2022-23 ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருதுக்கான விண்ணப்பம் இன்று (நவம்பர் 1) முதல் நவம்பர் 15, 2024 வரை உள்துறை அமைச்சகத்தின் பொதுவான விருதுகளுக்கான https://awards.gov.in/ போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்த விருதைப் பெறுபவர்களுக்கு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் தனிநபருக்கு 1,00,000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் தன்னார்வ அமைப்புக்கு 3,00,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும். மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2022-23ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருதுகளுக்கு விண்ணப்பிக்குமாறு இளம் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.