மாதர் சங்கம் சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம்!

திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும்…

திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு
மாநாடானது வரும் 26- ந் தேதி திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
நடைபெறவிருக்கிறது.

இந்த மாநாட்டை முன்னிட்டு, போதை பொருளுக்கு எதிராக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய நடை பயணம் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டதோடு மதுகடைகளுக்கும்,போதை பொருட்களுக்கு எதிரக எழுதப்பட்ட பாதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.