ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம்: வெளியிட்டது நாசா!

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படத்தை நாசா தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழான, விரிவான அகச்சிவப்புக் கதிர் புகைப்படம் இதுதான். நாசாவின் ஜேம்ஸ் வெப்…

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படத்தை நாசா தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழான, விரிவான அகச்சிவப்புக் கதிர் புகைப்படம் இதுதான்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்த பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப் படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளிடயிட்டார். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொலைநோக்கி எடுத்த மேலும் பல படங்களை நாசா இன்று வெளியிடவிருக்கிறது. ஹபுள் ஸ்பேஸ் தொலைநோக்கிக்கு அடுத்தகட்டமாக நிறுவப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி போன வருடம்தான் 10 பில்லியன் டாலர் செலவில் நிறுவப்பட்டது.

இந்தத் தொலைநோக்கிக்கு இரண்டே இலக்குகள்தான். ஒன்று, 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிரபஞ்சம் தோன்றிய தருணத்தில் உருவான நட்சத்திரங்களைக் கண்டறிவது. இரண்டாவது, தொலைதூரத்தில் மனிதர்கள் வாழத்தக்க கிரகங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்வது. நம்முடைய பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது. இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில் கிடைத்த ஒளிப்பதிவின் வயது 13 பில்லியன் ஆண்டுகள். ஆகவே, கிட்டத்தட்ட பிரபஞ்சம் தோன்றிய தருணத்தை இந்தத் தொலைநோக்கி நெருங்கிவிட்டது. இது ஒரு வகையில் பார்த்தால் காலப் பயணம்தான். மனித குலத்தின் அறிவியல் பயணத்தில் இது ஒரு முக்கியமான நாள்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.