‘ஹாய் நான்னா’வைரலாகும் நானியின் 30-வது பட தலைப்பு..!

நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படும் தெலுங்கு நடிகர் நானி தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து ‘பான் இந்தியன்’ ஸ்டாராக வலம் வரும் நிலையில், அவரது 30வது படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்று…

நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படும் தெலுங்கு நடிகர் நானி தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து ‘பான் இந்தியன்’ ஸ்டாராக வலம் வரும் நிலையில், அவரது 30வது படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நானி. தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் வழக்கமான தெலுங்கு பாணி படங்களை தவிர்த்து தொடர்ந்து ஜெர்ஸி, கேங் லீடர், ஷ்யாம் சிங்கா ராய் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடந்து நானியின் 30-வது படத்தை இயக்குனர் சவுரவ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ள நிலையில், வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

இந்நிலையில் பெயரிடப்படாமலேயே பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘ஹாய் நான்னா’ என படக்குழு டைட்டில் வைத்துள்ளதோடு, இது தொடர்பான வீடியோ கிளிம்ப்ஸ் ஒன்றையும் வெளியிட்டு தற்போது அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி
திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.