முக்கியச் செய்திகள் சினிமா

நடித்த படம் வெளியாகும் முன்னே உயிரிழந்த கலைஞன் நல்லாண்டி

கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நல்லாண்டி என்ற முதியவர், படம் வெளியாகும் முன்னே உயிரிழந்தார். 

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் கடைசி விவசாயி. கொரோனா ஊரடங்கால் படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வந்தது. படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபுவை தவிர மற்ற அனைவரும் நமக்கு தெரியாத முகங்களாகவே உள்ளனர். இந்தப்படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்தப்பின் ரசிகர்கள், விமர்சகர்கள் அனைவரும் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக பாராட்டியிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான மாயாண்டி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நல்லாண்டி என்பவர் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆனால், நல்லாண்டி படம் வெளியாகும் முன்பே உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் அவர் குடும்பத்தை யூடியூப் சேனல் ஒன்று நேர்காணல் செய்திருந்தது. அதில், நல்லாண்டியின் மகள் தெரிவித்திருப்பதாவது, கடைசி விவசாயி படத்தில் அப்பாவை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், அவர் படம் பார்க்க உயிருடன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை; அவரது நிஜ வாழ்க்கையை தான் படத்தில் கதையாக இருந்தது என்பதால் அதில் அவர் ஒன்றிப்போய் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

எனது அப்பா விவசாயம், 100 நாள் வேலை செய்து வந்தார்.ஒருநாள் அப்பா 100 நாள் வேலை செய்யும்போது அங்கு வந்த படக்குழுவினர் அவரிடம் படக்கதையை கூறி நடிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். அப்பாவுக்கும் கதை பிடித்திருந்ததால், நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர், நடித்துவிட்டு ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போது படப்பிட்ப்பு தளத்தில் அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்வதாக கூறி வந்தார். படப்பிடிப்பு முடிந்ததும்தான் கொரோனா வந்து விட்டதும். நாங்களும் படக்குழுவினரிடம் படம் எப்போது வெளியாகும் என கேட்டு வந்தோம். விரைவில் படம் வெளியாகும் என அவர்கள் சொல்லி வந்தனர். ஆனால், படம் வெளியாவதற்குள் அப்பா உடல் நலகுறைவால் உயிரிழந்துவிட்டர். அது எங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், படத்தில் நடித்து பலரின் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’முதல்வர் பழனிசாமிக்கு மக்கள் டாட்டா காட்ட தயாராகி விட்டனர்’- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கு – 7 தலைவர்கள் விடுவிப்பு

Gayathri Venkatesan

ஆட்டோ, ரிக்சாவில் பள்ளிக் குழந்தைகள் – உயர்நீதிமன்றம் கருத்து

Jayakarthi