“நான் ஜெயலலிதா ஃப்ரெண்டு” – ரசிகர்களை கவர்ந்த ஜே.பேபி ட்ரெய்லர்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  நடிகை ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடித்த ‘J.பேபி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும்…

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
நடிகை ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடித்த ‘J.பேபி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் தினேஷ் அம்மா மகனாக நடித்திருக்கும் இந்த படத்தை பா. ரஞ்சித்  தயாரித்து உள்ளார் என்பதும் இந்த படத்தை சுரேஷ் மாரிய என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சின்ன சின்ன கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் ஊர்வசி மீது ஒரு கட்டத்தில் வெறுப்பாகும் மகன் தினேஷ் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனை அடுத்து அவர் என்ன ஆனார்? அவருடைய குழந்தைத்தனமான சேட்டைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்த காமெடியுடன் கூடிய கதையம்சம் தான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.