உசிலம்பட்டியில் மாமன்னன் திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு
ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மர்மநபர்களால் கிழிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டின் போது இயக்குநர் மாரி செல்வராஜ், பேசியது சர்ச்சைக்குள்ளானது; இதனைதொடர்ந்து தென்மாவட்டங்களில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர்
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை உசிலம்பட்டியில் கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியில் இன்று மாமன்னன் திரைப்படம் உசிலம்பட்டி பொன்னுச்சாமி திரையரங்கில் காலை 10 மணிக்கு வெளியானது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் தியேட்டர் முன்பு ஒட்டப்பட்டிருந்த மாமன்னன் திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்துவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலிசார் போஸ்டர்களை
கிழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








