36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெல்ல ஆலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம கும்பல்.!! 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்!!

நாமக்கல் அருகே ஆலை கொட்டகை குடியிருப்புக்கு மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், 3 வடமாநில தொழிலாளர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஜேடர்பாளையத்தில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிப்பு ஆலை உள்ளது. அங்குள்ள கொட்டகைக்கு மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் கொட்டகையில் தங்கியிருந்த 3 வடமாநில தொழிலாளர்கள் உட்பட 4 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தகவலறிந்து சென்ற போலீசார், ராகேஷ், சுகுராம், யஸ்வந்த், கோகுல் ஆகிய 4 தொழிலாளர்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அவர்களிடம் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் 80 விழுக்காட்டிற்கு மேல் தீக்காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading