“பாஜக வேட்பாளரான மகன் தோல்வி அடைய வேண்டும்” – ஏ.கே.ஆண்டனி பேச்சு

தனது மகனும், பாஜக வேட்பாளருமான அனில் ஆண்டனி, மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும்…

தனது மகனும், பாஜக வேட்பாளருமான அனில் ஆண்டனி, மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது.  மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,  தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரும்,  முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி,  பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.  கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய அனில் ஆண்டனி, பாஜகவில் சேர்ந்தவுடன் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் மூத்த தலைவரும்,  முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி,  “என் மகனும்,  பாஜக வேட்பாளருமான அனில் ஆண்டனி, கேரளாவின் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் தோல்வி அடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.