என் வாழ்நாள் கனவு நிறைவேறியது – நடிகர் கவின் நெகிழ்ச்சி…!

நடிகர் கவின் தனது படத்தில் அனிருத் இசையமைத்தது குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். சதீஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ்…

நடிகர் கவின் தனது படத்தில் அனிருத் இசையமைத்தது குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சதீஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவின் உடன் இணைந்துள்ளார்.

ஹரிஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தில் படபிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் கவின் தனது வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில், அனிருத் சார் என் படத்தில் பாட வேண்டும் என்பது எனது கனவு. ஆனால் அவர் எனது படத்திற்கு இசையமைக்கிறார் என்பது என் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது.

 

இது, என் வாழ்நாள் ஆசை முழுவதும் நிறைவேறியது போல உள்ளது. எனது வாழ்க்கை பயணத்தில் என்னுடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. செண்பகமூர்த்தி சார் மிஷ்கின் சாருக்கு சிறப்பு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.