“என் ஹீரோ, என் ரோல் மாடல், என் கேப்டன்” என எம்.எஸ்.தோனி குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்னேஷ் சிவன் கிரிகெட் வீரர் டோனியுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், விக்னேஷ் சிவனின் டி-ஷர்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கையொப்பமிடுகிறார். பின்னர் தோனியின் கையை பிடித்து விக்னேஷ் சிவன் முத்தமிடுகிறார்.
இந்த வீடியோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “என் ஹீரோ, என் கேப்டன், என் ரோல் மாடலுடன்! தோனியுடன் இருப்பது எப்போதும் உணர்ச்சிப்பூர்வமானது. அவர் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி.
நாங்கள் திரையரங்கில் அவரது படத்துக்கு அன்பும் ஆதரவும் அளிக்க தயாராக இருக்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.







