உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு அமித்ஷாவுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “உள்துறை அமைச்சருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதியான தலைமை, அயராத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தேசத்திற்கான சேவையில் தொடர்ந்து வெற்றி கிடைக்கவும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியையும் இறைவன் வழங்கட்டும்” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.







