முக்கியச் செய்திகள் இந்தியா

“சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர்” – பிரதமர் மோடி

சமூக நீதிக்காக வாழ்க்கை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்டோபர் 28 தேதி தொடங்கி 30ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

தேவர் ஜெயந்தியையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது பிரதமர் நரேந்திர மோடி, பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், “தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். உயர்ந்த துணிச்சலும், அன்பான உள்ளமும் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றியவர்.” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

Halley karthi

இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Vandhana

பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் நினைவு தினம்; மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

Ezhilarasan