திருச்சி மாவட்டம், முசிறி அருகே பள்ளி மாணவர்கள் இடையில் நடந்த மோதலில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறினார்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் பாலசமுத்திரம் அரசு பள்ளியில், மாணவர்கள் இடையில் நடத்த மோதலில் மவுளீஸ்வரன் என்ற மாணவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மாணவனை தாக்கியதாக கூறப்படும் மூன்று மாணவர்களை தொட்டியம் போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் வனிதா ஆகியோர் மீது காவல்துறையினர் துறை ரீதியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் அறிந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உயிரிழந்த மாணவனின் பெற்றோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார். மேலும் இந் நிகழ்வில் முசிறி சட்டமன்ற எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனும் உடன் இருந்தார்.
—கோ. சிவசங்கரன்








