‘தங்கலான்’ அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தங்கலான் திரைப்படத்தில் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900…

தங்கலான் திரைப்படத்தில் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

 

 

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அப்பதிவில் ” தங்கலான் படத்தின் பின்னணி இசையமைப்பு முடிவடைந்தது, நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளேன், தங்கலான் எப்படிப்பட்ட திரைப்படம் என்று சொல்ல வார்த்தை இல்லை, கூடிய விரைவில் ஒரு அசத்தலான டிரைலர் வர இருக்கிறது, இந்தியன் சினிமா மிகப் பெரிய படைப்பான தங்கலானை பார்க்க இருக்கிறது” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.