முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – லேட்டஸ்ட் அப்டேட்!

மாவீரன் படத்தின வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்  – முருகதாஸ் காம்போவில் உருவாகவுள்ள புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.  மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி…

மாவீரன் படத்தின வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்  – முருகதாஸ் காம்போவில் உருவாகவுள்ள புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஒடி 75 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

மற்றொரு பக்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் . SK 21 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மாவீரனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் மிரட்டுவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் படம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மேலும், இந்த புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முருகதாஸ் இயக்கிய கத்தி, தர்பார் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் ஏற்கெனவே இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  அத்துடன் பாலிவுட் பிரபலமான மிர்னால் தாகூரை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.