#MurderCase – நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்!

கொலைவழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.  தனது பெண் தோழிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால், தன்னுடைய ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்ததாக, பிரபல கன்னட நடிகர்…

கொலைவழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். 

தனது பெண் தோழிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால், தன்னுடைய ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்ததாக, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தர்ஷனுக்கு, சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

மேலும் சிறையில் தர்ஷன் புகை பிடிக்கும் படம் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து வீடியோ கால் பேசும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையான நிலையில், சிறை காவலர்கள் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதை விசாரிக்க மூன்று தனி குழுக்கள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து நடிகர் தர்ஷனை பெங்களூரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற 24வது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆக.27ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த தர்ஷன் இன்று அதிகாலை 4 மணி அளவில் வட கர்நாடகாவில் உள்ள பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.