கொலை படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அதன் போஸ்ட் புரடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலை திரைப்பட்ம் ஜூலை 21ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதுதொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கொலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.






