சென்னைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை அணி!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை அணி..

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 38வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.  இப்போடிக்கான டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

முன்னதாக இரு அணிகளும் மோதிய இந்த ஆண்டு தொடருக்கான முதல் போட்டியில் சென்னை அணி வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி 6 அல்லது 7வது இடத்திற்கு செல்லும். ஒருவேளை மும்பை அணி வெற்றிப் பெற்றால் 8 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு செல்லும்.

சென்னை அணி: 

ரஷீத் கான், ரச்சீன் ரவிந்திரா, சிவம் துபே, விஜய் சங்கர், ஜடேஜா, ஜேமி ஓவெர்டன், தோனி, கலீல் அஹமத், நூர் அஹமத், பதிரானா.

மும்பை அணி: 

ரயன் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேட்ச்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, அஷ்வனி குமார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.