பழைய பொருள் கிடங்கில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!

மும்பை அருகே பழைய பொருள் கிடங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராடி அனைத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை ஒட்டிய புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள பழைய பொருள் சேமிப்பு கிடங்கில் இன்று…

மும்பை அருகே பழைய பொருள் கிடங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராடி அனைத்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை ஒட்டிய புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள பழைய பொருள் சேமிப்பு கிடங்கில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ குடோன் முழுவதும் பரவியதால், அப்பகுதியில் கடும் புகை பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க கடுமையாக போராடி அனைத்தனர்.

பெரும் தீ விபத்து என்பதால், தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 12 குழுவினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட இடம், குடிசைப்பகுதி என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, கிடங்கை ஒட்டியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.